வால்நட்ஸில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது பசியை கட்டுப்படுத்துவதுடன் ஆரோக்கியமற்ற கொழுப்பையும் கட்டுப்படுத்தும்.
பாதாம் பருப்பில் ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து உள்ளது. இது உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மலச்சிக்கலைத் தடுத்து, நார்ச்சத்து அதிகம் கொண்ட ஆற்றல் கொண்டது அத்திப்பழம். உலர்ந்த அத்திப்பழம் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்தது பிஸ்தா. பசியை கட்டுப்படுத்துவதால் தேவையற்றதை சாப்பிடுவதை இது கட்டுப்படுத்தும்.
பேரீச்சம்பழத்தில் ஏராளமான நார்ச்சத்தும், ஊட்டச்சத்தும் உள்ளது. உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.
ஆரோக்கியமான கொழுப்பும், புரதமும் நிறைந்தது முந்திரி. இது பசியை கட்டுப்படுத்துகிறது.
இனிப்பு உணவுகளை சாப்பிடுவதை இந்த கருப்பு பேரீச்சை கட்டுப்படுத்துகிறது. செரிமானத்திற்கும் பக்கபலமாக உள்ளது.
உலர் திராட்சைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை, பசியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.