அவகாவோவில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்து உள்ளன. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அவகாடோ உதவும்.
ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி, ஆன்டி- ஆக்ஸிடண்ட் உள்ளிட்டவற்றை நிறைந்துள்ளது.இது இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
அவகோடாவை தோல் நீக்கி எடுக்கவும். ஸ்ட்ராபெர்ரி பழங்களை சுத்தப்படுத்தவும். இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு, அதோடு இனிப்பு தேவைப்படும் அளவுக்கு தேன் சேர்க்கவும்
பால் சேர்த்து அரைக்கவும். தொடர்ந்து அரைக்க வேண்டாம். சில நொடிகள் விட்டு விட்டு அரைக்கவும்.
quick mix மோட் என்றும் சொல்லலாம். நன்றாக மைய அரைக்க வேண்டும் என்றில்லை. பால், அவகோடா, ஸ்ட்ராபெர்ரி மூன்றையும் நன்றாக மிக்ஸ் மட்டும் செய்தாலே போதுமானது.
துருவிய பாதாம், முந்திரி, திராட்ச்சை என உங்களுக்குப் பிடித்த நட்ஸ், சூரியகாந்தி, பூசணி விதைகள் கூட சேர்க்கலாம்.
துருவிய பாதாம், முந்திரி, திராட்ச்சை என உங்களுக்குப் பிடித்த நட்ஸ், சூரியகாந்தி, பூசணி விதைகள் கூட சேர்க்கலாம்.
சீட்ஸ் வகைகளில் ஜிங்க் அதிகமாக இருப்பதால் உடலுக்கு நல்லது.
காலை உணவோடு, உணவு நேரத்திற்கு முன்பான ஸ்நாக்ஸ் என எல்லா நேரங்களிலும் இதை அருந்தலாம்.