தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

ஊட்டசத்து நிறைந்த நெல்லி

நெல்லிக்காய் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. பயோட்டின், வைட்டமின் நிறைந்தது.

Image Source: Canva

வைட்டமின் சி

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகளவு உள்ளது. உடலில் உள்ள செல்களின் செயல்பாட்டிற்கு ஆரோக்கியமாக திகழ்கிறது.

Image Source: Canva

நோய் எதிர்ப்பு சக்தி

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.

Image Source: Pexels

குடல் ஆரோக்கியம்

நெல்லிக்காய் வயிற்றில் அமில சமநிலையை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது. செரிமானத்தை சீராக்கி குடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்.

Image Source: Pexels

சரும பளபளப்பு

நெல்லிக்காயில் ஆக்சிஜனேற்றிகள் அதிகம் இருப்பதால் இது ரத்தத்தை சுத்திகரிக்கிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால், சருமம் பளபளப்பாக காணப்படும்.

Image Source: Canva

கூந்தல் ஆரோக்கியம்

கூந்தலின் வேர்களுக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஆற்றல் நெல்லிக்காய்க்கு உள்ளது. இதனால், முடி உதிர்வு மற்றும் முடி வளர்ச்சிக்கு நெல்லிக்காய் பக்கபலமாக இருக்கிறது.

Image Source: Canva

சர்க்கரை வியாதிக்கு நல்லது

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் நெல்லிக்காய்க்கு உள்ளது.

Image Source: Canva

ஆரோக்கியமான வாழ்வு

இவ்வளவு ஆரோக்கியங்கள் நிறைந்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பாக வாழலாம்.

Image Source: Canva