சுவையான கேரட் அல்வா செய்ய சில டிப்ஸ்!
கேரட்டை நன்றாக கழுவி, தோல் நீக்கவும். கேரட்டை சிறிதாக கேரட் சீவுவதில் சீவி எடுக்கவும்.
ஒரு கடாயில், நெய் ஊற்றி அதில் முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
இதனுடன், சீவிய கேரட் சேர்த்து வதக்கவும். அதனுடன் மீதி இருக்கும் நெய் சேர்த்து அடி பிடிக்காமல் வதக்கவும்.
இதில் தண்ணீர் சேர்க்க வேண்டாம். கேரட் நெய்யில் வேக வேண்டும். இதனுடன் பால் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் 5 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
கேரட் மென்மையாக மாறியதும் அதனுடன், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இவற்றை 5 -7 நிமிடங்களுக்குப் பிறகு கேரட் அல்வா தயாராகிவிடும்.
கேரட் சுத்தம் செய்யும்போது நன்றாக தண்ணீரில் ஊற வைத்து அதன் பிறகு தோல் நீக்கவும். தண்ணீரில் ஊற வைத்து எடுத்து ஒரு துணியில் காய வைக்கவும்.
கேரட் அல்வா சுவையாக இருக்க வேண்டும் என்றால் தரமாக கேரட்களை தேர்வு செய்ய வேண்டும்