சிலருக்கு ஏதும் காரணம் இல்லாமலே முகம் அடிக்கடி வீங்கிப் போய்விடும் இளவயதினர் பலருக்கும் முகத்தில் வீக்கம் ஏற்படும் சில மருந்துகளின் எதிர்வினையாக இது இருக்கலாம் முகத்தின் திசுக்களில் திரவங்கள் குவிவதால் அவை உங்கள் முகத்தை வீக்கம் அடையச் செய்யும் பெரும்பாலும் ஒவ்வாமை எனப்படும் அலர்ஜியால் பலருக்கும் இந்த முக வீக்கம் ஏற்படும் தூசி, வாசனை திரவியம் போன்றவற்றால் ஒவ்வாமை ஏற்படும் உணவுப் பொருட்களான முட்டை அல்லது பால் போன்ற சில பொருட்களால் ஒவ்வாமை உண்டாகும் நீங்கள் உங்களின் உடலுக்கு மீறிய எடையைக் கொண்டு இருந்தால் கூட முகத்தில் வீக்கம் ஏற்படும் சைனசிடிஸ் என்பது கன்னங்கள் மற்றும் மூக்கின் இருபுறமும் அமைந்துள்ள சைனஸ் குழிவுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறிப்பதாகும் காது மடலுக்குக் கீழ்பகுதி, கழுத்தின் இரண்டு பக்கங்களிலும் வீக்கம் ஏற்படுவது சளியின் பொதுவான அறிகுறியாகும்