கோலிவுட்டின் புது முகம் - யார் இந்த சாய் அப்யங்கர்?
தமிழ் திரையுலகின் பிரபல பின்னணி பாடகர்களான திப்பு – ஹரிணி தம்பதியின் மகன் இவர் ஆவார். இவரின் ஆல்பம் பாடலான கட்சி சேர, ஆச கூட, சித்ரி புத்ரி ஆகிய பாடல்கள் சமூக வலைதளங்களில் மாபெரும் வெற்றி பெற்றது.
லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் எல்.சி.யூ. வரிசையில் இடம்பெறும் பென்ஸ் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த படத்தை ரெமோ, சுல்தான் படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்க உள்ளார்.
பிரதீப் ரங்கநாதான். சூர்யா-45 ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளரும் இவரே. அதோடு, அல்லு அர்ஜுன் - அட்லி இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு இவரே இசையமைப்பாளர் என்று கூறப்பட்டுள்ளது,.
20 வயதே ஆன சாய் அபியங்கர் பாடகராக, இசையமைப்பாளராக அசத்தி வருகிறார்.
3 படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்களின் படங்களுக்கும் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.
கோலிவுட்டின் புதிய ஸ்டாராக உருவெடுத்து வருபவர் சாய் அபியங்கர். இனி வரும் காலங்களில் முக்கிய நட்சத்திரங்களின் படங்களில் சாய் அபியங்கரே இசையமைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
சாய் அப்யங்கர் இசையில் இன்னும் ஒரு படமும் வெளியாகவில்லை. ஆனால், இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது,
இவர் தன் ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதை ஈர்த்துவிட்டதாக கூறப்படுகிறது,
சாய் அப்யங்கர் நல்ல பாடல்கள், பின்னணி இசையை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாடகராக மட்டுமல்லாமல், இசையமைப்பாளராக ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்குமா என்று விரைவில் தெரியும்