அல்லு அர்ஜுன்- அட்லி கூட்டணி ஹாலிவுட் பட ஷூட்டிங் எப்போது?
‘புஷ்பா 2’ படத்துக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் அடுத்த படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அட்லீ இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அல்லு அர்ஜுன் பிறந்த நாளான (08/04/2025) முன்னிட்டு வீடியோ வெளியிட்டுள்ளது திரைப்படம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 'AA22xA6' என்ற தலைப்பிட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெயர் பின்னர் அறிவிக்கப்படும்.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுடன் அட்லி – அல்லு அர்ஜுன் இருவரும் பேசுவது, பின்பு அமெரிக்காவில் உள்ள ஹாலிவுட் நிறுவன கலைஞர்களுடன் உரையாடுவது என 2:34 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள்.
`அவென்சர்ஸ் - என்ட் கேம், கேப்டன் மார்வெல்' போன்ற திரைப்படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்ட `Lola VFX' நிறுவனத்தில் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக இந்த படம் உருவாக இருக்கிறது. பிரபல ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள்.
Fractures FX , ILM technoprops , legacy effects போன்ற முன்னணி விஷுவல் எஃபக்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை இயக்க இருக்கிறார் அட்லி. கேப்டன் அமெரிக்க, ஸ்பைடர் மேன் , ஐயன் மேன்,அவெஞ்சர்ஸ் போன்ற சூப்பர்ஸ் ஹீரோஸ் படங்களில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் இந்தக் கதையை பெரிதாக பாராட்டியுள்ளனர்.
தமிழில் அடுத்தடுத்து வசூல் ரீதியாக வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் அட்லி. இவரின் ஜவான் படம் இந்திய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பிரம்மாண்டமாக ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் படத்தை எடுக்க இருக்கிறார்,இவர்.
`கட்சி சேர', `ஆசைக்கூட' போன்ற சுயாதீன பாடல்களின் மூலம் மக்களிடம் வரவேற்பைப் பெற்ற சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் எனக் கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூரவமான அறிவிப்பு வெளியாகவில்லை.