abp live

’Studio Ghibli’ உருவான கதை தெரியுமா?

Published by: ஜான்சி ராணி
abp live

சமூக வலைதளங்களில் ஜிப்லி /கிப்லி புகைப்பங்கள் பெரிதும் பேசப்பட்டது. அதற்கு காரணம், சாட் ஜிபிடி சாட்பாட்டில் அப்டேட் (gpt-4o) வந்தது. இதில் அனிமேஷன் பாணியிலான புகைப்படங்களை மாற்றியமைக்க முடியும்.

abp live

ஹயாவ் மியாசாகி, இசாவோ தகாஹாட்டா இருவரும் ஜப்பானில் 'ஸ்டூடியோ ஜிப்லி' என்ற பெயரில் ஒரு அனிமேஷன் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை 1985 ஆம் ஆண்டு தொடங்கினர்.

abp live

ஜப்பான் மக்களின் தினசரி வாழ்க்கை முறையை மிகவும் நுணுக்கமாக, இயல்பாகவும் கையால் வரையப்பட்டு அது அனிமேசன் படமாக மாற்றப்பட்டது. இது நல்ல வரவேற்பை பெற்றது.

abp live

சுமார் 40 ஆண்டு காலமாக திரைத்துறையில் மிகச் சிறப்பான படைப்புகளை தந்துவரும் இந்த ஜிப்லி முறை சாட் ஜிபிடிதான் (Chat GPT) வழங்கிய அப்டேட் காரணமாக அதுபற்றி தெரியாதவர்களை சென்றடைந்தது.

abp live

The Tale of the Princess Kaguya,The Boy and the Heron, Only Yesterday, Spirited Away,The Secret World of Arrietty, Princess Mononoke, Ponyo, Howl's Moving Castle உள்ளிட்ட பல திரைப்படங்களை உருவாக்கியுள்ளது.

abp live

கலை, அரசியல், ஜப்பான் மக்களின் அன்றாட வாழ்க்கை, சோகம், பிரிவு, மகிழ்ச்சி, சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளை கடத்தும் கதையமைப்பை கொண்டதாக படங்கள் அமைந்திருக்கும்.

abp live

சில நிறுவனங்களும் இந்த முறையை தங்களது விளம்பரத்திற்காக பயன்படுத்தி வருகின்றன. கிப்லி புகைப்பட ட்ரென் காரணமாக ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் புதிய பயனர்களை பெற்றதாக தெரிவித்துள்ளது.

abp live

ஹயாவ் மியாசாகி ஜப்பானின் அனிமேஷன் துறையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவரது திரைப்படங்களில் இயற்கை உடன் சார்ந்த வாழ்வியல், மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு, எல்லா உயிர்களும் சமம் ஆகியவற்றை மையப்படுத்தி இருக்கும்.

abp live

2003-ல் ஸ்பிரிட்டட் அவே திரைப்படம் ’சிறந்த அனிமேஷன்’ பிரிவில் ஆஸ்கர் விருது கோல்டன் குளோப் விருதையும் பெற்றது. 2015-ல் வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருதையும் ஹயாவ் மியாசாகி வென்றார். ஏ.ஐ. மூலம் ஜிப்லி புகைப்படங்களை உருவாக்குவது படைப்பாளர்களுக்கு திறனை அவமரியாதை செய்வதோடு, தனிநபர் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாகிறது என்கின்றனர் சிலர்.