நடிகை அபிநயா காதலர் வெகசனா கார்த்திக் யார்?
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த படம் நாடோடிகள். இந்தப் படத்தில் அபிநயா நடித்தது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
அவரது காதலர் வெகசனா கார்த்திக் உடன் மார்ச் 9-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெகசனா கார்த்திக் என்பவரை 15 ஆண்டுகளாக காதலித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.
பள்ளி காலத்தில் இருந்தே வெகசனா கார்த்திக் - அபிநயா இருவரும் நண்பர்கள். காதலித்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
கார்த்திக் ஐதராபாத்தில் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கு கார், பைக் ஆகியவை என்றால் மிகவும் ப்ரியம்.
கார்த்திக்கின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்கள், பைக் உடன் இருக்கும் புகைப்படங்களை காண முடிகிறது.
அபிநயா - கார்த்திக் திருமணம் ஐதராபாத் நகரில் நடைபெறும் என்று அபிநயாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
கார்த்திக் - அபிநயா திருமணம் இந்தாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிநயாவிற்கு வாழ்த்துகள். மகிழ்ந்திருங்கள்.