ராஷ்மிகா,சல்மான் கான் நடித்த சிக்கந்தர் - வெற்றியா?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சிக்கந்தர்’. இதற்கு சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சிக்கந்தர்’.
சாஜித் நாடியவாலா தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீஸர், ட்ரெய்லர் வெளியான போதே, மிக கலவையான விமர்சனங்களே பெற்றது.
சல்மான் கான் கதாபாத்திரம், அவரின் நடிப்பு ஆகியவை கதையோடு பொருதிப்போவதாக இல்லை. அதோடு, கதையும் பெரிதாக இல்லை என்று சிலர் தெரிவித்து வருகின்றனர்.
ஏ. ஆர். முருகதாஸிடம் இருந்து இப்படியான ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர்.
சிலரோ இந்தப் படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் என்றும், ஒருமுறை பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அதோடு, கதை, திரைக்கதை என எதுவும் சொல்லப்படி இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இப்படம் வெளியான முதல் நாளில் உலக அளவில் ரூ.11 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சல்மான் கான், ராஷ்மிகா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளதால் ஒரு முறை பார்க்கலம் என்று தெரிவித்துள்ளனர்.