'வில்லன் பேரு ரகுவரன்' - நடிகர் ரகுவரனின் நினைவு தினம் இன்று..
நடிகர் ரகுவரன் வில்லன் கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவை அதிர வைத்தவர்
1958ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி கேரளாவின் ‘கொல்லங்கோடில்’ பிறந்தார். கோயம்பத்தூரில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார்
1982ல் மலையாளத்தில் உருவான 'காக்கா' திரைப்படத்தின் மூலம் இவற்றின் சினிமா பயணம் தொடங்கியது
அதன் பின் ‘ஏழாவது மனிதன்’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
இவர் நடித்த ஒரு ஓடை நதியாகிறது, முடிவல்ல ஆரம்பம், குற்றவாளிகள், சம்சாரம் அது மின்சாரம், பூவிழி வாசலிலே போன்ற படங்கள் வெற்றியடைந்தது
இருப்பினும் முதலில் ஹீரோவாக நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதால், வில்லன் கதாபாத்திரத்திற்கு களம் இறங்கினார் ரகுவரன்
ஊர்க்காவலன், மனிதன், காதலன், பாட்ஷா, முத்து, அருணாச்சலம், ரட்சகன், முதல்வன் என இவர் வில்லனாக நடித்த படங்கள் இவரை முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் அமர்த்தியது
கடைசியாக இவர் நடித்த படம் யாரடி நீ மோஹினி. இதில் தனுஷுக்கு அப்பாவாக நடித்திருப்பார். இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே இவர் உயிரிழந்தார்
இன்றும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள நடிகர் ரகுவரனின் நினைவு தினம் இன்று (மார்ச் 19 2008)