ஓ.டி.டி.யில் வெளியாகும் டிராகன் - எப்போது தெரியுமா?

Published by: ஜான்சி ராணி

ஏஜிஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான டிராகன் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவிடன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் படத்தினை பாராட்டினர்.

டிராகன்’ படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

டிராகன் படத்தின் ஓ.டி.டி. வெளியீடு பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மார்ச், 21-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் டிராகன் படம் வெளியாகிறது.

வாட்ச் லிஸ்ட்டில் சேர்த்திருங்க.