தக் லைஃப் 'ஜிங்குச்சா' பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி! புகைப்படங்கள்!
நாயகன் படத்திற்கு பிறகு, 38 ஆண்டுகளுக்கு கழித்து மணிரத்னம் கமல் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தக் லைஃப் சிம்பு , த்ரிஷா , ஐஸ்வர்யா லக்ஷ்மி , அசோக் செல்வன் , ஜோஜூ ஜார்ஜ் , அபிராமி ஆகிய நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கிறார்கள்.
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்லார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ பத்திரிகையாளர் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
'ஜிங்குச்சா' கல்யாண வைபில், கமல் ஹாசன், சிம்பு இருவரும் கொண்டாட்டமாக ஆடுவதுடன் பாடலின் காட்சிப்படுத்துதல் மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
கமல் ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா ஆகியோரின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது,
சிம்பு பேசுகையில், ‘கமல் சார் என்னுடைய ஆன் ஸ்கிரீன் குரு. இந்தப் படத்தில் நான் கனவுல நினைக்கிற அத்தனை விஷயங்களும் நடந்திருக்கு.” என்று தெரிவித்தார்.
விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு, தக் லைஃப் படத்தில் த்ரிஷா - சிம்பு ஆகியோருக்கு இடையே மேஜிக் இருப்பதாக தெரிவித்தார் த்ரிஷா.
தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.