சபரிமலைக்கு சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன்!
தமிழ் சினிமா பிரபலம் கார்த்தி சபரிமலை கோயிலுக்கு சென்றுள்ளார்.
தமிழின் முன்னணி நடிகர்களான கார்த்தி, ரவி மோகன் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாகவும் இருக்கின்றனர்.ரவி மோகன் காரத்தே பாபு படத்திலும் நடித்து வருகிறார்.
சபரிமலை கோயிலுக்கு கார்த்தி, ரவி இருவரும் சேர்ந்து சென்றுள்ளனர். கோயில் நிர்வாகிகள் நடிகர்களுடன் புகைப்படம் எடுத்துகொண்டனர்.
நண்பர்கள் ரவி, கார்த்தி இருவரும் கோயிலுக்குச் சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் பகிந்துவருகின்றனர்.
கார்த்தி நடிப்பில் வா வாத்தியார் படம் வெளியாக இருக்கிறது. அதோடு, சர்தார் -2 திரைப்படத்திலும் நடிக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் - கார்த்தி கூட்டணியில் கைதி -2 படமும் உறுதியாகிவிட்டது.