விக்ரமின் வீர தீர சூரன் ரிலீஸ்! - லேட்டஸ்ட் அப்டேட்

Published by: ABP NADU

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம்.

இவர் கடைசியாக நடித்த தங்கலான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து விக்ரம் வீர தீர சூரன் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அருண் குமார் இயக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளிவருமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தள்ளிப்போய்விட்டது.

அதன்பின் கடந்த சில நாட்களுக்கு முன் ஜனவரி 30 ரிலீஸாகும் எனத் தகவல் வெளியானது.

இந்நிலையில், வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

ஆனால், திரைப்படத்தின் ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.