மதகஜராஜா படம் எப்படி இருக்கு? - ரசிகர்களின் விமர்சனம்

Published by: ABP NADU

12 வருடங்களுக்கு பிறகு மதகஜராஜா திரைப்படம் இன்று(12/01/2025) வெளியானது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தை ஜெமினி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.

விஜய் ஆண்டனி இசையில் விஷால் சந்தானம் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், சில காரணங்களுக்காக 12 வருடங்கள் வெளியாகாமல் இருந்தது.

படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

படம் நன்றாக இருக்கிறது என்று பெரும்பான்மையான ரசிகர்கள் கூறியுள்ளனர்.

விஷால் மற்றும் சந்தானத்தின் காம்போ வேற லெவல் என்றும் கூறியுள்ளனர்.

படம் சில இடத்தில் சொதப்பலாக இருந்தாலும், நகைச்சுவை அசத்தலாக இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

பாடல்கள் படத்திற்கு பலம் சேர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.