வேறு மாநிலத்தில் இருந்து வந்து கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து தமிழ்நாட்டில் கொண்டாடித் தீர்க்கப்படும் நயன்தாரா என்றைக்குமே ஸ்பெஷல் தான்!
ஹீரோயின்களுக்கான வயது தடையை இன்றைய தமிழ் சினிமாவில் உடைத்து, திருமணத்துக்குப் பின்னும் மாஸ் ஹீரோயினாக வலம் வரும் வகையில் தன் கரியரை பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார் நயன்தாரா.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையே நானும் ரெளடிதான் திரைப்பட காலத்தில் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இடையே சண்டை போட நேரம் இல்லாமல் கிடைக்கும் நேரத்தில் மகிழ்ச்சியான நினைவுகளை சேகரித்து வாழ்வதாக இருவரும் தெரிவிக்கின்றனர்.
உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என நயன்தாரா - விக்னேஷ் சிவன் அவர்களுடைய குழந்தைகளுக்கு பெயரிட்டுள்ளனர். இருவரின் வாழ்வும் குழந்தைகளின் வருகைக்கு பிறகு அழகாக மாறியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
நயன்தாரா திருமணத்திற்கு பிறகு விக்னேஷ் சிவனுக்குப் பிடித்த கேக் செய்ய கற்றுக்கொண்டு அதை செய்து கொடுத்த நினைவுகளை காதலுடன் பகிர்ந்திருந்தார். குழந்தைகளின் வருகையால் நயன்தாரா அவர்களின் சேட்டைகளை ரசிக்கும் பக்கத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மிக மோசமான விமர்சனங்கள், வசவுகள் தாண்டி இத்தனை அன்பு, வெற்றி, கொண்டாட்டங்களுடன் தன் தனிப்பட்ட வாழ்வையும் ஒரு சாம்ராஜ்யம் போல் கட்டமைத்து ராணியாக வலம் வரும் நயன்தாராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
நெட்ஃபிளிக்ஸில் ’Nayanthara: Beyond the Fairy Tale’ என ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இவரின் வாழ்க்கை பயணம், திரைப்பயணம், காதல் உள்ளிட்டவைகள் பற்றி பேசியிருக்கிறது.
நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ” உன்மீதான மரியாதை, உன்மீது இருக்கும் அன்பை விட அதிகம்.” என குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.
நயன்தாராவும் விக்னேஷ் சிவன் மீதிருக்கும் காதலை ‘Blessings’, ‘உயிர்’ எனக் குறிப்பிட்டு வெளிப்படுத்துவார்.