ஊடகத் துறையில் பணிபுரியும் நயன்தாராவுக்கு யூ-டியூப் சேனல் ஆரம்பித்து பிரபலமாக வேண்டும் என்று கதை நகரும். முதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
நெல்சன் இயக்கத்தில் கோலமாவு கோகிலாவாக நயன்தாரா முகத்தில் அப்பாவித்தனம் என கதைக்கு ஏற்றவாறு நடித்திருப்பார்.
தெலுங்கு மொழியில் அனாமிகா என்ற பெயரில் வெளிவந்தது. இது இந்தி மொழியில் வெளியான கஹானி என்ற திரைப்படத்தின் மறு உருவாக்கம் ஆகும்.
அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடித்திருந்தார். சிறு வயதிலிருந்தே உணவு சமைப்பதில் தீவிர ஆசை கொண்டவராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆழ்துளைக் கிணறுக்காகப் போடப்படும் குழியில் ஒரு கிராமத்துச் சிறுமி விழுந்து விடும் சிறுமியை மையப்படுத்திய கதை. நேர்மையான கலெக்டராக நயன்தாரா. நீர் அரசியல், அதிகார அரசியல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசும் படத்தில் இவர் நடிப்பு பாராட்டப்பட்டிருக்கும்.
ஜவான் நயன்தாராவிற்கு முதல் PAN INDIA படம். ஷாருக் கானுடன் இணைந்து நடித்திருப்பார்.
தெலுங்கு மொழியில் வெளிவந்த ராமாயணம் திரைப்படத்தில் சீதையாக நடித்திருப்பார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம்.
இமைக்கா நொடிகள் படத்தில் அதிரடி சி.பி.ஐ. அதிகாரியாக நடித்திருப்பார்.
ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.