தி கோட் படத்தின் முதல் நாள் வசூலை மிஞ்சியதா விடாமுயற்சி?

Image Source: twitter/@SureshChandraa

சுமார் 2 ஆண்டுகள் இடைவெளியில் அஜித்குமார் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

Image Source: twitter/@SureshChandraa

லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் என பெரும் நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Image Source: twitter/@SureshChandraa

விடாமுயற்சி படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், நேற்று வெளியான படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

Image Source: twitter/@SureshChandraa

கடந்த 2023ம் ஆண்டு வெளியான அஜித்தின் துணிவு படம் முதல் நாளிலேயே 23 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

Image Source: IMDB

இந்திலையில், விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளிலேயே ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் ரூ.46 முதல் ரூ.50 கோடி வரை வசூல் செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

Image Source: twitter/@SureshChandraa

அதேநேரம், விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான தி கோட் திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.126.32 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Image Source: IMDB