=விக்ரம் நடிப்பில் ‘வீர தீர சூரன்-2’ திரைப்படம் எப்படி இருக்கு?
எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் படம் 'வீர தீர சூரன்’. எச் ஆர் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது.
துஷாரா விஜயன் , எஸ் ஜே சூர்யா , சூரஜ் வெஞ்சமூடு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
துஷாரா விஜயன் , எஸ் ஜே சூர்யா , சூரஜ் வெஞ்சமூடு உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
ஓடிடி ரிலீஸ் தேதியை முடிவு செய்வதற்கு முன்பே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்ததால் இரு நிறுவனத்திற்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் திரைப்படம் இரண்டு ஷோ வெளியாகவில்லை.
பிறகு, 27.03.2025 அன்று இரவு 7 மணிக்கு திரையரங்குகளில் வீர தீர சூரன் வெளியானது. விக்ரமின் நடிப்பிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
’வீர தீர சூரன்’ திரைப்படம் குறித்து பாசிடிவான கருத்துகள் சமூக வலைதளங்களில் கிடைத்து வருகிறது. விக்ரமின் நடிப்பு மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
விக்ரம் ‘காளி’யாக சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். திரைப்படத்தின் பின்னணி இசையில் ஜி.வி. பிரகாஷ் குமார் மிரட்டியுள்ளார் என கமெண்ட் கிடைத்துள்ளது.
58-வயதிலும் விக்ரமின் நடிப்பு மிளிர்வதாகவும் படத்தின் இண்டர்வெல் ப்ளாக் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
வீர தீர சூரன் - 2 படத்திற்கு ரசிகர்கள் நேர்மறையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.