செழிப்பாக தழைத்த வாழை.. படம் டக்கரா இருக்கு!

Published by: அனுஷ் ச

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன் நடித்துள்ள படம் வாழை

சிவனைந்தமும் அவன் நண்பன் சேகரும் பள்ளி விடுமுறை நாட்களில் வாழை தார் சுமக்கும் வேலைக்குச் செல்கிறார்கள். வாழைத் தார் சுமக்கும் பணிக்குச் செல்லாத அந்த ஒரு நாளில் நிகழும் சம்பவம் என்ன? என்பதே மீத கதை

1997, 1998 காலகட்டத்தில் நடக்கும் கதைக்களத்தை மிக தத்ரூபமாக படமாக்கியுள்ளார் மாரிசெல்வராஜ்

படத்தை பெரும்பாலும் தாங்கிப்பிடிப்பதே சிவனைந்தமும், அவரது நண்பன் சேகர் என்ற கூட சொல்லலாம்

படத்தின் ஆசிரியையாக வரும் நிகிலா விமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்

திவ்யா துரைசாமி பாசமான அக்காவாகவும், கலையரசன் உரிமை குரல் கொடுக்கும் இளைஞராகவும் நடித்து இருந்தனர்

படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதியே படத்தின் பெரும் பலமாக அமைந்துள்ளது

படத்திற்கு சந்தோஷ் நாராயணின் இசை பக்கபலமாய் அமைத்துள்ளது

யாருமே எதிர்பார்காத கிளைமேக்ஸ் காட்சியை கொடுத்தது படத்திற்கு மற்றொறு பிளஸ் என்று கூறலாம்

உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள வாழை படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்கலாம்