அடேங்கப்பா மோகன் லாலின் சொத்து மதிப்பு இவ்வளவா? மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் மோகன் லால் இவர் சினிமாவில் அறிமுகமாகி 44 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் மோகன் லால்தான் நடிக்கும் படங்களுக்கு 20 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் என கூறப்படுக்கிறது அதை மட்டுமல்லாமல் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ, விளம்பரங்கள் மற்றும் பல தொழில்களும் செய்து வருகிறார் இவர் விஸ்மயாஸ் மேக்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார் மேலும் கேரளாவில் பல திரையரங்குகளை சொந்தமாக வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது மோகன் லால் பிக்பாஸ் ஷோவிற்கு 18 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன டொயோட்டா இன்னோவா, W221 பென்ஸ், எஸ் கிளாஸ், பென்ஸ் GL350 , டொயோட்டா வெல்ஃபயர் உள்ளிட்ட பல ஆடம்பர கார்களை மோகன்லால் வைத்துள்ளார் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் இவருக்கு சொகுசு பங்களாக்கள், 50 ஏக்கர் மதிப்பிலான நிலங்கள் உள்ளதாக கூறப்படுகிறது நடிகர் மோகன்லால் நிகர சொத்து மதிப்பு ரூ. 375 முதல் 400 கோடிகள் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது