Trauma இசை வெளியீட்டு விழா!
நடிகர் விவேக் பிரசன்னா நடிக்கும் ட்ராமா திரைப்பட இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது
இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசையை வெளியிட்டார். படக்குழுவினருடன் நடிகர் ராதா ரவி மற்றும் முன்னாள் MLA விஜயதாரணி ஆகியோர் இணைந்து அதைப் பெற்றுக்கொண்டனர்
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார்
மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகி இருக்கும் ட்ராமா திரைப்படத்தை ஆல்ஃபா 3 என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது
விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்
அஜித் ஸ்ரீனிவாசன் ட்ராமா படத்திற்கு ஒளிப்பதிவை செய்துள்ளார்
இந்தப் படத்திற்கு ராஜ் பிரதாப் இசை அமைத்திருக்கிறார்
மார்ச் 21 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ட்ராமா திரைப்படம்