டூரிஸ்ட் ஃபேமிலி - ஷோசியல் மீடியா விமர்சனம்!

Published by: ஜான்சி ராணி

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி டிராமா திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. சசிகுமார் , சிம்ரன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

பாபு , எம்.எஸ் பாஸ்கர் , மிதுன் ஜெய் , பக்ஸ் பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். எம்.ஆர்.பி என்டர்டெயின்மெண்ட் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

தமிழகத்தில் குடிபெயரும் ஈழத் தமிழ் குடும்பத்தை மையமாக வைத்து காமெடி டிராமா திரைப்படமாக உருவாகியிருக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மே 1 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் Press Show-வில் படத்தை பார்வையிட்டவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்,

டூரிஸ்ட் ஃபேமிலி ஒரு கிளாசிக் திரைப்படம். நல்ல ஃபீல் குட் படம் என்று படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

டூரிஸ்ட் ஃபேமலி நல்ல குடும்ப படம். உணர்ச்சிமிக்க, நகைச்சுவை கலந்த திரைப்படம். சிறந்த கதை மற்றும் உருவாக்கம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் சிறந்த எமோசனல் டிராமா. அழகான படம். குடும்பத்துடன் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்,

டூரிஸ்ட் ஃபேமலி திரைப்படம் மே-1ம் தேதி வெளியாகிறது. மக்களிடம் வரவேற்பை பெறுமா என்பது படம் வெளியாதும் தெரியும்.