சூர்யாவின் ரெட்ரோ காதல் கதையா?

சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ரெட்ரோ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இவர் பாடிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

“இது ஒரு கேங்ஸ்டர் கதை அல்ல. முதல்முறையாக நான் ஒரு காதல் கதையை எடுக்கிறேன்.” என்று கார்த்திக் சுப்புராஜ் பட புரோமோசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் கண்ணாடிப்பூவே, கனிமா ஆகிய பாடல்கள் ஹிட் ஆகியுள்ளது. பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான படங்களில் காதல் ட்ராக் இருந்திருக்கலாம். ஆனால், இது முழுக்க காதல் படமாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்..

கனிமா பாடலில் பூஜா ஹெக்டேவின் நடனமும் அவரது ரியாக்சனும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

சூர்யா நடிப்பில் வெளிவந்த காதல் படங்கள் எல்லாம் ஹிட். காதல் உருக அவரது நடிப்பும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

இந்தப் படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ரெட்ரோ திரைப்படம் மே,1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.