தன்னம்பிக்கை நாயகி சமந்தா பிறந்தநாள்!

Published by: ஜான்சி ராணி

கல்லூரி படிப்பு முடிந்ததும் மாடலிங் செய்துகொண்டிருந்த சமந்தாவை ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தான் ஒரு நடிகையாக அடையாளம் கண்டுகொண்டார். அவரை சினிமாவில் நடிக்கலாமே என்றிருக்கிறார்.

அழகும், புத்திசாலித்தனமும் நிறைந்தவர் சமந்தா. அவர் நடிகை ரேவதியைப் போன்றவர் என்று ரவிவர்மா சமந்தாவைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

மாஸ்கோவின் காவேரி படத்தில் நடிகை சமந்தா அறிமுகமாக இருந்தார். ஆனால் அந்த படம் வெளியாக தாமதமான காரணத்தினால் கெளதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு பிரதியில் நாயகியாக அறிமுகமானார்.

நடிகையாக தமிழில் சமந்தாவுக்கு முதல் வெற்றியைக் கொடுத்த படம் ராஜமெளலி இயக்கிய நான் ஈ. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். நீதானே என் பொன் வசந்தம் படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

ஒரே ஆண்டில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை ரேவதிக்கு பிறகு தட்டிச்சென்ற ஒரே நடிகை சமந்தாதான். 

திருமண விவாகரத்திற்கு பிறகு புஷ்பாவில் ’ஊ சொல்றியா’ என்று திரும்பி வந்து ஒரு ரவுண்டு கட்டினார் சமந்தா.

மையோசிடிஸ் என்கிற தசை அழற்ச்சி பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. சினிமாவில் இருந்து சிறிது காலத்திற்கு விலகி தொடர் சிகிச்சையில் இருந்தார். இப்போது தன்னை தயார்படுத்தி கொண்டிருக்கிறார்.

ஆரோக்கியமற்ற பொருட்களின் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்றார். உடற்பயிற்சி செய்வது, மனநலன் ஆரோகியம் ஆகியவற்றின் அவசியம் பற்றி சமூக வலைதளங்கள் தொடர்ந்து பேசி வருகிறார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சமந்தார். ஆரோக்கியத்துடன் மனத்திற்கு பிடித்தவற்றையெல்லாம் செய்து மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள்.

திரைத்துறையில் தயாரிப்பாளராகவும் சமந்தா தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார். அவரது தயாரிப்பில் 'Subham' மே-9ம் தேதி ரிலீஸ் ஆகிறது.