பிரம்மாண்ட படங்களுக்காக பெயர் பெற்றவர் இயக்குனர் ஷங்கர். எந்திரன், 2.0 போன்ற இவரது படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டவை.
தற்போது தெலுங்கில் இயக்கிய ’கேம் சேஞ்சர்’ எனும் படம் ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது. ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தில் முன்பு நடிக்கவிருந்த நடிகர் யாரென்றும் நடிக்காமல் போனதற்கான காரணமும் என்னவென்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் கதையை ஷங்கர் முதலில் விஜய்யிடம் தான் சொன்னாராம். அவருக்கும் கதை மிகவும் பிடித்திருந்ததாம்.
இயக்குனர் ஷங்கர் ஒரு ஆண்டு கால்ஷீட் தர வேண்டுமென கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது.
அரசியல் பணிகள் இருப்பதால் விஜய் விலகிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனால் ராம் சரணை வைத்து படத்தை எடுத்து முடித்துவிட்டார் ஷங்கர்