இந்தியாவின் கோடீஸ்வர பாடகி இவர் தானா?! நீங்களும் தெரிஞ்சுக்கோங்க இசையுலகில் பல பாடகர்கள் வளர்ந்து வருகின்றனர். ஒவ்வொரு பாடலுக்கும் சிலரின் சம்பளம் கோடிக்கணக்கில் இருக்கும். இந்திய சினிமாவை தன் குரல் வளத்தால் கட்டிப்போட்டவர் ஸ்ரேயா கோஷல் தான். இவர் பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.180 முதல் ரூ.185 கோடி வரை எனக் கூறப்படுகிறது. இருந்தும்கூட இவர் இந்தியாவின் பணக்கார பாடகியாக முடியவில்லை. இந்தியாவின் கோடீஸ்வர பாடகியின் சொத்து மதிப்பு ரூ.200 கோடி என்று கூறுகின்றனர். பாலிவுட் இசையமைப்பாளர் குல்ஷன் குமாரின் மகள் துளசி குமார் தான் பணக்கார பாடகியாக உள்ளார். இசையுலகில் 2006ம் ஆண்டு அறிமுகமானார். இந்திய ரசிகர்கள் மிகவும் விரும்பும் பாடகர்களில் ஒருவராக உள்ளார்.