நடிகை எம்மா வாட்சன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
பிரபல ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன். குழந்தை நட்சத்திரமாக ‘ஹாரிபாட்டர்’ படத்தில் அறிமுகமானவர் இவர். Hermione Granger ஆக நடித்திருந்தார்.
ஹாரிபாட்டர் படங்களில் நடித்து வந்த இவர், பிறகு மற்றப் படங்களிலும் நடிக்கத் தொடங்கி பிரபலமானார்.
திஸ் இஸ் எண்ட், நோவா, ரெக்ரஷன், தி சர்கிள் உட்பட பல படங்களில் நடித்துள்ள அவர், கடைசியாக 2019-ம் ஆண்டு வெளியான ‘லிட்டில் வுமன்’ படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
35 வயதாகும் எம்மா வாட்சன், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ‘கிரியேட்டிவ் ரைட்டிங்’ படிப்பில் சேர்ந்துள்ளார்.இவர் இளங்கலை ஆங்கில இலக்கியத்தை 2014-ம் ஆண்டு பிரவுன் பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார்.
The Harry Potter Series, The perks of Being a wallflower, Beauty and the Beast, Little Women, The Bling Ring, Women, The Circle ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
சமூகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமையும் வாய்ப்புகளும் இருக்க வேண்டும் என்பதுதான் வரையறை. இதுதான் அரசியல், பொருளாதாரம், சமூகம் சார்ந்த பாலினச் சமத்துவக் கோட்பாடு என்கிரார் எம்மா வாட்சன்
சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் பெண்ணியம், பாலின சமத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பேசுபவர். சமூக அநீதிகளுக்கு குரல் கொடுக்கும் சமூக செயல்பாட்டாளர்.
இளம்பெண்கள் தங்களை இளவரசியாகவும் பலவீனமானவர்களாகவும் கருதுகிறார்கள். இது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஒரு படை வீரன் தன்னைப் படை வீரனாக மட்டுமன்றி, போர் வீரனாகவும் அடையாளம் கண்டுகொள்கிறான். நான் இளவரசியாக இருந்தால், போர் செய்யும் இளவரசியாகவே இருப்பேன். - எம்மா வாட்சன்
எம்மா வாட்சன் சிறுவயதாக இருக்கும்போதே அவரது பெற்றோர்கள் விவகாரத்து பெற்றனர். இவர் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவல்களைப் பகிந்துகொள்ள விரும்பாத ப்ரைவேட் பர்சன்!