ஹாரி பாட்டர் வெப் சீரிஸாக வருகிறதா?
ஜே.கே ரோலிங் எழுதிய 7 பாக நாவலை மையப்படுத்தி உருவான படம் ஹாரி பாட்டர்.
என மொத்தம் எட்டு பாகங்களாக இப்படம் வெளியானது. ஃபேண்டஸி , மேஜிக் என பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த கதையுலகம் ஈர்த்தது.
டேனியல் ரேட்க்ளிஃப் , ரூபர்ட் க்ரிண்ட் , எம்மா வாட்சன் என இப்படத்தில் நடித்த நடிகர்கள் பிற்காலத்தில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக உருவானார்கள்.
ஹாரி பாட்டர் கதை வெப் சீரிஸாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது
கேம் ஆஃப் த்ரோன்ஸ் மாதிரியான பிரம்மாண்ட வெப் சீரிஸ்களை தயாரித்த HBO நிறுவனம் ஹாரி பாட்டர் வெப் சீரிஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதுமுக நடிகர்களை இந்த தொடரில் நடிக்க வைக்க இருப்பதாக படக்குழு சார்பாக தெரிவித்துள்ளார்கள். கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களில் பட்டியலை எச்.பி.ஓ வெளியிட்டுள்ளது.
Nick Frost as Hagrid, John Lithgow as Dumbledore, Paul Whitehouse as Argus Filch, Luke Thallon as Quirinus Quirrell, Paapa Essiedu as Severus Snape, Janet McTeer as Minerva McGonagal ஆகியோர் நடிப்பதாக தெரிவித்துள்ளது.
ஹாரி பாட்டர் பலருக்கும் மிகவும் ஃபேவரைட் ஆனது. இப்போது வெப் சீரிஸ் அறிவிப்பு அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப்போவது யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.