மன அழுத்தத்தை நிர்வகிக்க நடிகை சமந்தா சொல்லும் டிப்ஸ்!
நடிகை சமந்தா உடல் ஆரோக்கியம், மனநலன் ஆகியவற்றைப் பற்றி தொடர்ந்து பேசிவருகிறார்.
அன்றாட நாட்களை மனசோர்வு, மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள சமந்தா சொல்லும் ‘affirmations’ சில..
காலையில் எழுந்ததும் மொபைல் பார்ப்பதை தவிர்த்து நிதானமாக 15 நிமிடங்கள் எடுத்து தியானம், உடற்பயிற்சி என்று ஏதாவது செய்யலாம். அன்றைய தினத்தை திட்டமிடலாம்.
எந்த சூழலாக இருந்தாலும் நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதை கவனிக்க வேண்டும். உணர்வுகளை புறக்கணிக்க கூடாது.
எந்த சூழலாக இருந்தாலும் கட்டுப்பாட்டியில் இல்லாத விசயங்கள் பற்றி அதிகம் கவலைப்படுவதை தவிர்க்க வேண்டும். எதை செய்ய வேண்டுமோ அதில் மட்டுமே கவனம் செலுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
உங்களின் தோற்றம், செயல்களை மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என நினைக்க கூடாது. எல்லாருக்கும் உங்களை பிடித்துவிடாது. பிடித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் மீது நம்பிக்கை வைப்பது அவசியம்.
வழி தெரியவில்லை என்றாலும் அடுத்த அடியில் மட்டும் கவன செலுத்த வேண்டும். சிறிய சிறிய முயற்சிகள், செயல்பாடுகள் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்லும்.
சுய மரியாதையும் தன்னம்பிக்கையும் ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியம். குறிப்பாக பெண்கள் யாருக்காவும் எதற்காகவும் இவற்றை விட்டுக்கொடுக்க கூடாது.