நடிகை சாக்ஷி அகர்வால் திருமணம் முடிந்தது! மாப்பிள்ளை யார் தெரியுமா?

நடிகை சாக்ஷி அகர்வால் படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனவர்.

ராஜா ராணி, காலா உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலம் ஆனார்.

அதர்ம கதைகள், நான் கடவுள் இல்லை மற்றும் கெட்டவனு பேர் எடுத்த நல்லவன் டா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது சாக்ஷிக்கு கோவாவில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடந்துள்ளது.

குழந்தை பருவத்தில் இருந்தே நண்பராக இருந்து வந்த நவனீத் மிஸ்ரா என்பவரை தான் காதலித்து கரம்பிடித்துள்ளார்.

திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில் திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.