நடிகை ரம்யா பாண்டியனின் ரீசன்ட் க்ளிக்ஸ்!
தமிழில் ‘டம்மி டப்பாசு’ படத்தில் அறிமுகமான ரம்யா பாண்டியன், அதனைத்தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’படத்தில் நடித்தார்.
இந்தப் படம் இவருக்கு நல்லப்பெயரை பெற்றுத்தந்தது. பிக்பாஸில் சீசன் 4 இல் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த சீசனில் கலந்து கொண்ட அவர் இறுதிப் போட்டி வரை முன்னேறினார்.
சமீபத்தில் நடந்துமுடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட இவர் 3-ம் இடம் பிடித்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஓளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியும் இவருக்கு ரசிகர்களிடம் பரவலான அங்கீகாரத்தைப் பெற்று தந்தது.
யோகா பயிற்சியாளரான லவல் தவான் என்பவரை ரம்யா பாண்டியன் திருமணம் செய்துகொண்டார்.
திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகியது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ரவி ஷங்கர் ஆசிரமத்தில் யோகா பயிற்சி மையத்தில் ரம்யா பாண்டியன் இணைந்தார். இந்த ஆசிரமத்தில் அவரது பயிற்சியாளராக வந்தவர் தான் லவல் தவான்.
ரம்யா பாண்டியன், இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளிட்டுள்ளார்.
ரம்யா பாண்டியன் புகைப்படங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.