மனோஜ் பாரதிராஜா மறைவு - திரைத்துறை பிரபலங்கள் நேரில் அஞ்சலி!

Published by: ஜான்சி ராணி

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் நேற்று (25.03.2025) காலமானார்.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாரதிராஜாவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நடிகர் சத்யராஜ், இயக்குநர் பேரரசு... இயக்குநர் பேரரசு பகிர்ந்த இரங்கல் குறிப்பில், தந்தை மகனுக்குக் கொள்ளி வைத்தது போன்ற துயரம் யாருக்கும் நடக்கக்கூடாது.

மனோஜ் பாரதிராஜாவுக்கு சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது இழப்பு பாரதிராஜா குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தம்பி ராமைய்யா..சரவணன்..

த.வெ.க. தலைவர் நடிகர் விஜய், நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி செலுத்தினர்

நடிகர் கருணாஸ் மற்றும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்..

இயக்குநர் மணிரத்னம், நடிகை சுஹாசினி .. நடிகர் நாசர் நேரில் மரியாதை செலுத்தினர்..

நடிகை ராதிகா.. நடிகர் சரத்குமார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் ஸ்டாலின் முத்து..

இயக்குநர் பி. வாசு.. நடிகர் விதார்த்..

மனோஜ் பாரதிராஜாவின் உடல் 26-03-2025 அன்று மாலை 3 மணி வரை நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பிறகு உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்குக் கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.