தள்ளிப்போகிறது ‘இட்லி கடை’..காரணம் ‘குட் பேட் அக்லியா’?
தனுஷ் இயக்கி நடித்து வரும் அடுத்த படம் இட்லி கடை. அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண் ஆகிய முன்னணி நடிகர்கள் இட்லி கடை படத்தில் நடித்துள்ளனர்
இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் 10 வெளியாக இருந்த நிலையில், குட் பேட் அக்லியும் அதே நாளில் வெளியாகவுள்ளது
தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போட்டிருப்பதாக இட்லி கடை தயாரிப்பாளர் காஷ் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்
தனுஷ் vs அஜித் திரைப்படங்கள் மோத இருந்ததால், இரு நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் மோதி வந்தனர். இதனால் இட்லி கடை ரிலீஸ் தள்ளிப்போகும் என பரவலாக பேசப்பட்டது
இதை குறித்து பேசிய ஆகாஷ் பாஸ்கரன், இன்னும் இட்லி கடை படப்பிடிப்பு ஆமுடியாததாலும், அனைத்து நடிகர்களும் வேறு படங்களில் பிஸியாக இருப்பதாலும் இந்த முடிவு எடுத்ததாக கூறியிருக்கிறார்
எனவே அவசரப்படுத்தாமல், இந்த படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பதாகவும் சொல்லியிருக்கிறார்
இட்லி கடை திரைப்படத்தின் வெளியிட்டு தேதி இன்னும் 10 நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார் தயாரிப்பாளர்