ஸ்வீட்ஹார்ட் ஓ.டி.டி. வெளியீட்டுத் தேதி இதோ!

Published by: ஜான்சி ராணி

யுவன் ஷங்கர் ராஜா இசை மற்றும் தயாரிப்பில் ஸ்வினீத் இயக்கத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ் ஆகியோரது நடிப்பில் வெளியாகி இருக்கும் ரொமான்டிக் காமெடி படமான ஸ்வீட்ஹார்ட்.

ரியோ ராஜ், ஜோ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றார். ஸ்வீட்ஹார்ட் படத்திலும் பாராட்டுகளை பெற்றுள்ளார்.

டிரைலரிலேயே இந்த படத்தின் முழு கதையையும் சொல்லிவிடும்படி இருந்தது. படம் பார்த்தவர்கள் கலவையான விமர்சனத்தை தெரிவித்தனர்.

அறிமுக இயக்குநர் வினீத் எஸ். சுகுமார் இயக்கிய இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

இதில் கோபிகா ரமேஷ் நாயகியாகவும் ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலம், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

2025 மார்ச் 14 அன்று இந்தப் படம் வெளியானது.

நவீன கால இளைஞர்களின் காதலைப் பேசும் திரைப்படமாக வெளியான ஸ்வீட்ஹார்ட் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

ஸ்வீட்ஹார்ட் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வருகிற ஏப். 11 அன்று ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

ஸ்வீட்ஹார்ட் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.