ஸ்டார் அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தென்னிந்தியாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகர் அல்லு அர்ஜுன் இன்று 43-வது பிறந்தநாள். தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நெருங்கிய சொந்தமான திரைப்பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் மகன் அல்லு அர்ஜுன்.
சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருத்தாலும் ஒரு ஹீரோவாக 2002ம் ஆண்டு வெளியான 'கங்கோத்ரி' திரைப்படம் மூலம் ஹீரோவாக நடித்தார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த பக்கா சென்னை பையன்தான் அல்லு அர்ஜுன். 20 வயதிற்கு பிறகு தான் ஐதராபாத்தில் செட்டிலானார்.
அல்லு அர்ஜுன் ஒரு சிறந்த டான்சர். மிகவும் கடினமான டான்ஸ் ஸ்டேப்ஸ்களை கூட அசால்ட்டாக ஆடக்கூடியவர். அதற்கு சான்றாக அமைந்த புட்டபொம்மா புட்டபொம்மா, ரிங்கா ரிங்கா பாடல் அவரை பட்டி தொட்டி எல்லாம் சென்றடைந்து ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அடையாளம் காட்டியது.
தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடும் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் மீது அளவு கடந்த மரியாதையும் அன்பும் கொண்டவர். ஸ்டைலிஷ் பாடி லாங்குவேஜ், துறுதுறுப்பான நடிப்பு, அசரவைக்கும் டான்ஸ் இவை தான் அல்லுவின் ஐகானிக் அடையாளங்களாக சொல்லப்படுகின்றன.
சுகுமாரின் 'புஷ்பா' திரைப்படம் மூலம் பான் இந்திய நடிகராக முன்னேறி சர்வதேச அளவில் பிரபலமான அல்லு அர்ஜுன் தற்போது அதன் இரண்டாம் பாகமான புஷ்பா : தி ரூல் படமும் செம்ம ஹிட்..
திரைப்பட தயாரிப்பு நிறுவனம், ஹோட்டல்கல், விளம்பரம், தியேட்டர் என பல்வேறு தொழில்களை செய்து வருகிறார் இவர். சொத்து மதிப்பு ரூ.460 கோடி என்று சொல்லப்படுகிறது.
அல்லு அர்ஜுன் ரூ.100 கோடி மதிப்பில் பங்களா வைத்திருக்கிறார். ப்ரைவேட் ஜெட் இவரிடம் இருக்கிறது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அல்லு அர்ஜுன்