இளம்வயது உடல்நலப் பிரச்னைகள் - தவிர்க்க டிப்ஸ்!

Published by: ஜான்சி ராணி

இன்றைய உணவு முறை மாற்றம், போதிய அளவு உடற்பயிற்சியின்மை ஆகிய காரணங்களால் கல்லீரலில் கொழுப்பு சேர்வது, உடல் பருமன் ஆகிய பிரச்சனைகள் சிறு வயதிலேயே வருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் உடல்பருமன், நீரிழிவு நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.

ஆரோக்கியமாக இருக்க.. முடிந்தபோதெல்லாம் வீட்டில் சமைத்த உணவை உட்கொள்வது. உணவகங்களிலிருந்து அல்லது ஆன்லைன் மூலமாக உணவு ஆர்டர் செய்வதைக் குறைப்பது.

பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் என சத்தான சரிவிகித உணவை தினமும் உட்கொள்வது. குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிடுவதை ஊக்குவிப்பது. வீட்டிலேயே குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் தயாரித்துக் கொடுப்பது.

குழந்தையின் 4-5 வயதுக்குள் எந்த உணவு ஆரோக்கியமானது, எது ஆரோக்கியமானது அல்ல என்பதை கற்றுக்கொடுப்பது. பெற்றோர்களும் குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கங்களில் முக்கிய பங்காற்றுகின்றனர்.

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மிகுந்த பானங்கள், பாஸ்ட் ஃபுட் எனும் துரித உணவுகள், ஜங்க் ஃபுட் ஆகியவை உடல் பருமன் மற்றும் அதுசார்ந்த நோய்களுக்குக் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Published by: ஜான்சி ராணி

சத்தான உணவு, நல்ல தூக்கம், விளையாட்டு அல்லது உடற்பயிற்சி, குறைந்த அளவு ஸ்க்ரீன் நேரம் ஆகியவை ஆரோக்கியமான உடல்நலத்திற்கு அவசியம்.

தினமும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது அவசியம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அதிகளவு சர்க்கரை, உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.