சூர்யாவின் ரெட்ரோ இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்!

Published by: ஜான்சி ராணி

ரெட்ரோ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இவர் பாடிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கண்ணாடிப்பூவே, கனிமா ஆகிய பாடல்கள் ஹிட் ஆகியுள்ளது.

2டி என்டெர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்துக்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹஃபீக் முகமது அலி படத்தொகுப்பு பணி செய்துள்ளார்.

கனிமா பாடலில் பூஜா ஹெக்டேவின் ஆடல் கவனம் ஈர்த்தது.

கங்குவா படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகிறது என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ரெட்ரோ திரைப்படம் ரொமாண்டிக் ஆக்சன் எண்டர்டெய்னராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்ரோ திரைப்படம் மே,1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.