சூர்யாவின் ரெட்ரோ - லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Published by: ஜான்சி ராணி

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், வித்யா சங்கர், தமிழ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாரயாணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படத்தின் முதல் பாடல் கண்ணாடி பூவே ஏற்கனவே வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

விவேக் எழுதியுள்ள ’கனிமா’ பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். கனிமா பாடலும் ரசிகர்களிடையே ஹிட்.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வழியாக சூர்யா கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் ரொம்ப ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பிரம்மாண்டமான வெற்றிபெற்றதால் ரெட்ரோ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் குவிந்துள்ளன. 

இப்படம் சூர்யாவின் கரியரில் மற்றொரு பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்

சூர்யா ஆர். ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம்  வாரியர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்கிறார். சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.

ரெட்ரோவின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டது.