ஸ்டார்பக்ஸின் முன்னாள் சிஇஓ லக்ஷ்மண் நரசிம்மனின் பதவிக்காலம் முடிந்த பிறகு ப்ரையன் நிக்கோல் சிஇஓ-வாக செப்டம்பர் 9, 2024-ல் பதவியேற்றார்.
கடந்த ஆண்டில் நான்கு மாதங்களுக்கு மட்டும் 96 மில்லியன் டாலர் சம்பளமாக பெற்றுள்ளார்.
அதுமட்டுமின்றி, 1 லட்சத்து 43 அமெரிக்க டாலர்கள் அவரின் வீட்டு வாடகைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள அவரது வீட்டிலிருந்து சியாட்டில் உள்ள ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு செல்ல விமானம் ஏற்படுத்திக் கொடுத்து 72,000 அமெரிக்க டாலர்களையும் ஒதுக்கியுள்ளது.
இதெல்லாம் போக, அவரின் தனிப்பட்ட செலவுகளுக்காக 19,000 டாலர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள், கூகுள் நிறுவன சிஇஓ-க்கள் டிம் குக், சுந்தர் பிச்சை கூட இவ்வளவு சம்பளம் பெறவில்லை என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு தோராயமாக 75 மில்லியன் டாலர்கள் சம்பளமாக பெற்றுள்ளனர்.