சம்யுக்தா மேனன் செப்டம்பர் 11, 1995 இல் பிறந்தவர்.
தத்தமங்கலம் சின்மயா வித்யாலயாவில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், பொருளாதார படிப்பில் பட்டம் பெற்றவர்.
மலையாளத் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார்.
2015 இல் பாப்கார்ன் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகினார்.
2018 இல் தீவண்டி திரைப்படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்றார்.
கொச்சி டைம்ஸ் வெளியிட்ட மிகவும் விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு 7 வது இடத்தில் இருந்தவர்.
2020 ஆம் ஆண்டு கொச்சி டைம்ஸ் விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் 2 வது இடத்தில் இருந்தவர்.