நடிகை கீர்த்தி சுரேஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த மகாநதி திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றார்.
வருன் தவான் நடித்துள்ள பேபி ஜான் படத்தின் மூலம் இந்தியிலும் எண்ட்ரி கொடுத்தார்.
Koimoi வெளியிட்டுள்ள தகவலின்படி, கீர்த்தி சுரேஷிடம் ரூ.41 கோடி மதிப்பில் சொத்து இருக்கிறதாம்.
கீர்த்தி சுரேஷின் மாத வருமானம் ரூ.35 லட்சம்; ஆண்டுக்கு ரூ.15 கோடி வருமானம்.
இவர் விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் ரூ.30 லட்சம் கிடைக்குதாம்.
சென்னை, ஹைதராபாத் நகரங்களிலும் கீர்த்தி சுரேஷுக்கு வீடு இருக்கிறதாம்.
ஒரு திரைப்படத்திற்கு ரூ.4 கோடி பெறுகிறார் என்று கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் ஸ்பான்ஸர் போஸ்ட் மூலம் ரூ. 15 லட்சம் வரை பெறுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
Toyota Innova Crysta, Volvo S90, BMW 7 Series 730 Ld , Merc Benz GLC43, ஆகிய சொகுசு கார்கள் வைத்திருக்கிறாராம்.
கீர்த்தி சுரேஷ் நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.