abp live

எம்புரான் திரைப்படம் - வசூல் வேட்டையா?

Published by: ஜான்சி ராணி
abp live

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. 2-வது பாகம் எம்புரான். பிருத்விராஜ்  , மோகன்லால் , டொவினோ தாமஸ் , மஞ்சு வாரியர் , சூரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

abp live

கேரள மாநில அரசியல் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் அதிகாரப் போட்டிதான் லூசிஃபர் மற்றும் எம்புரான் ஆகிய இரண்டு படங்களின்  மையக்கதை. அதிகாரம் மற்றும் பணத்தாசையில் அரசியல்வாதிகள் போதைப் பொருள் கடத்தல் , தீவிரவாத செயல்களுக்கு துணை இருக்கிறார்கள்.  

abp live

மோகன்லாலுக்கு அடுத்தடுத்து ஸ்லோ மோஷன் காட்சிகளை வைத்திருப்பது கதையின் இயல்பான போக்கை கெடுக்கிறது. 

abp live

எம்புரான் படத்தில் மிகப்பெரிய பிளஸ் என்றால் அதன் தொழில்நுட்ப தேர்ச்சிதான். ஸ்டன்ட் காட்சிகளாகட்டும் , படத்திற்காக தேர்வு செய்யப்பட்ட லொக்கேஷன் , காஸ்டியூம் துப்பாக்கி , ப்ரோடக்‌ஷன்ஸ் , வி.எஃப்.எக்ஸ் என உலகத் தரமான ஒரு காட்சி அமைப்பை சாதித்து காட்டியிருக்கிறார்கள்.

abp live

கதை ரீதியாக இன்னும் எங்கேஜ் செய்திருந்தால் மலையாள சினிமாவில்  எம்புரான் திரைப்படம் ஒரு பெரிய மைல் கல்லாக இருந்திருக்கும் 

abp live

கதை எப்படியிருந்தாலும், மோகன்லான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

abp live

எம்புரான் திரைப்படம் முதல்நாளில் சுமார் ரூ.22 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

abp live

இன்னும் எம்புரானின் பட தயாரிப்பு நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ தகவலை தெரிவிக்கவில்லை.