abp live

நடிகர் அஜித் குமாரின் 65-வது படம் பற்றிய தகவல்!

Published by: ஜான்சி ராணி
abp live

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

abp live

குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

abp live

வெகு நாட்களுக்குப் பிறகு, நல்ல அஜித் படம் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

abp live

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் 10 திரையரங்குகளில் வெளியாகியது. ரசிகர்கள் அஜித் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

abp live

இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

abp live

இதற்கு முன்பு சிறுத்தை சிவா, ஹெச்.வினோத் ஆகிய இயக்குநர்களுடன் அஜித் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

abp live

அஜித் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பாக இயக்கி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

abp live

ஆதிக் ரவிச்சந்திரன் - நடிகர் அஜித் குமார் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் வந்தால் நன்றாக இருக்கும் என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

abp live

அஜித் குமார், கார் பந்தயம் போட்டிகளில் பிஸியாக இருக்கிறார். அவரின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.