அஜித்தின் வீரம் திரைப்படம் ரீ-ரிலீஸ் தேதி தெரியுமா?
தமிழ் சினிமாவில் அஜித் குமாரின் நடிப்பிற்கு என்பதை விட அவரின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் ஆகியவற்றிற்கு ரசிகர்கள் உண்டு. அதோடு, படம் நடித்தாலும் நடிக்கவில்லை என்றாலும் அஜித் குமார் என்ற மனிதருக்கே ரசிகர்கள் ஏராளாம்.
அஜித் குமாரின் நேர்மை, அவரின் படத் தேர்வுகள், அவருடைய கனவுகளை நோக்கி பயணிப்பது, சக மனிதர்களை மதிப்பது, ரசிகர்களின் நலனில் அக்கறை என அவருடைய அன்பு மொழி தனித்துவமானது. இதை ரசிக்கும் மக்கள் ஏராளம்.
1993ம் ஆண்டு அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதோடு, கார் பந்தயத்திலும் ஈடுபட்டார்.
ஆசை திரைப்படத்தில் அஜித் குமாரின் நடிப்பும் அந்த Charm படம் ஹிட் ஆனது. அதற்கு அடுத்த படங்களில் அஜித் குமாரின் நடிப்புக்கு ரசிகர்கள் அதிகமாகினர்.
சிறுத்தை சிவா இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக தமன்னா நடித்தார். சந்தானம், விதார்த், பாலா, நாசர், தம்பி ராமையா, அப்புக்குட்டி என ஏராளமானோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
சிறுத்தை சிவா உடன் அஜித் கூட்டணி ரசிகர்களின் ஃபேவரைட் என்றே சொல்லலாம். அஜித் நடிப்பில் 2014-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி ரிலீஸான படம் 'வீரம்'.சிறுத்தை சிவா, அஜித்துடன் இணைந்த முதல் படம் இது.
வீரம் திரைப்படம் அண்ணனாக தம்பி பாசத்தை மையமாகக் கொண்ட கதை. 'வீரம்' படத்தில் கிராமத்து அண்ணனாக சால்ட் & பெப்பர் லுக், நரைமுடி, வேட்டை சட்டை என அசத்தியிருப்பார்.
நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம்(2025) தேதி 'வீரம்' படம் ரீ-ரிலீஸ் ஆகிறது. அர்ஜூன் தாஸ் அவரது எக்ஸ் தளத்தில் ரீ-ரிலீஸ் டீசருடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.