கண்மூடி திறக்கும் போது - ஷட் அப் சச்சின்!
20 ஆண்டுகளை கடந்த சச்சின் திரைப்படம், கோடையில் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது
ஜான் மகேந்திரன் இயக்கி, கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவான சச்சின் படம் கல்லூரி வாழ்க்கை, காதல், நகைச்சுவை என ரசிகர்களை ஈர்த்த படமாகும்
சச்சின் (நடிகர் விஜய்) மற்றும் ஷாலினி (ஜெனிலியா) கதாபாத்திரங்கள் , இன்று வரை நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது
கண்மூடி திறக்கும் போது , வாடி வாடி கைப்படாத சீடி,குண்டுமாங்கா தோப்புக்குள்ள பாடல்கள் அனைவரின் விருப்ப பாடல் ஆகும்
சச்சின் ரீ-ரிலீஸ் ஆவதை ஒட்டி, நா. முத்துக்குமார் வரிகளில் உருவான கண்மூடி திறக்கும் பாடலின் புதிய லிரிக்கல் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது
புதிய எடிட்டிங்கால் வெளியான வீடியோ, ரசிகர்களை கவர்ந்து வருகிறது
கோடையில் வெளியாகும் சச்சின் திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்