மிருணாளினி பொறியியல் படித்து முடித்துவிட்டு ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் பின்னர், டிக் டாக், டப்ஸ் மேஷ் மூலம் பிரபலமாகி சினிமாவில் நுழைந்தார் தியாகராஜன் குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ் ஆடிஷனில் தேர்வான மிருணாளினிக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது ஏலியனாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பலரின் கவனத்தை ஈர்த்தார் அதனை தொடர்ந்து எனிமி, எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா ஆகிய படங்களில் நடித்தார் எனிமி படத்தில் இவர் நடனமாடிய மால டம் டம் பாடல் செம ஹிட்டானது தமிழ் மொழி படங்களுடன் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார் வருண் தேஜ், அதர்வாவுடன் கடலக்கொண்ட கணேஷ் எனும் படத்திலும் நடித்தார் இந்நிலையில், விஜய் ஆண்டனியுடன் இவர் நடித்த ரோமியோ படம் இன்று வெளியாகியுள்ளது பட ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் மிருணாளினி