ராஷ்மிகாவிற்கு இந்த விஷயங்கள்தான் ரொம்ப பிடிக்குமாம்!
Published by: பிரியதர்ஷினி
என் நாய்க்குட்டி என்னுடைய குழந்தை போன்றது. இதை எனக்கு ரொம்ப பிடிக்கும் - ராஷ்மிகா
என்னுடைய வேலை... என்னுடைய ரசிகர்கள்..நான் இன்று வாழும் வாழ்க்கைக்கு என்றும் நன்றி உணர்வோடு இருப்பேன் - ராஷ்மிகா
வாழ்க்கையில் ஜாலியாக இருப்பது. இப்படி ஜாலியாக இல்லாமல் இருப்பதெல்லாம் ஒரு வாழ்க்கைதானா? - ராஷ்மிகா
நாளின் எந்த நேரத்தில் எங்குவேண்டுமானலும் தூங்குவதில் வரும் இன்பம் எதிலும் கிடையாது - ராஷ்மிகா
புத்தகம் படிக்கும் பழக்கத்தை இப்போதுதான் தொடங்கியுள்ளேன். இப்போதாவது இந்த பழக்கத்தை தொடங்கினேன் என்பதை நினைத்தால் சந்தோஷமாக உள்ளது - ராஷ்மிகா
தோன்றும் போது இனிப்பு வகையான உணவுகளை சாப்பிட்டு திருப்தி அடைவது - ராஷ்மிகா
கர்நாடக மாநிலத்தை சார்ந்த பெண்ணான என்னை காஃபியின் நறுமணம் சுண்டி இழுக்கும் - ராஷ்மிகா
நான் விரும்பும் உணவையெல்லாம் சாப்பிட்ட பின்னும் இவ்வளவு ஃபிட்டாக இருக்கிறேன் என்பதை நினைத்தால் வியப்பாகதான் உள்ளது - ராஷ்மிகா
நண்பர்களே.. உங்களால் முடிந்தவரை உலகத்தில் பயணம் செய்யுங்கள். இது உங்களின் மனநிலையை மேம்படுத்தும். பொருட்களுக்காக செலவழிப்பதை தவிர்த்து அனுபவங்களுக்காக செலழிக்கலாம் - ராஷ்மிகா