’பெருசு’ திரைப்படம் எப்படி இருக்கு?
இந்த படத்தை இளம் இயக்குனர் இளங்கோ ராம் இயக்கியுள்ளார். வைபவுடன் அவரது சகோதரர் சுனில் நடித்துள்ளார். மேலும், சாந்தினி, ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
பெருசு (எ) ஹாலாஸ்யத்தின் மகன்கள். ஒரு நாள் ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பும் பெருசு, திடீரென இறந்து போகிறார்.
இறுதிச் சடங்கின் போது எதிர்பாரா விதமாக ஒரு பிரச்னை எழுகிறது. துயரமான சூழலில் வெளியான உண்மைகள், இறுதி ஊர்வலம் நடந்ததா என்பதே கதை..
படம் சில விசயங்களை பேசியிருந்தாலும் முதல் பாதி ரசிர்களிடையே வரவேற்பு பெறவில்லை என சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
படத்தின் இசை கொஞ்சம் நன்றாக இருந்தாலும், புதிய கதையாக இருந்தாலும் கலவையான விமர்சங்களை பெற்று வருகிறது.